வியாழன், 7 மே, 2020

பத்து ரூபாய் இயக்கத்தின் தலைவர் யார் ???

பத்து ரூபாய் இயக்கத்தின் தலைவர் யார் ???
உலககில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவு  கொடுக்கும் விவசாயிகளை கடவுளுக்கு நிகராக போற்றுகின்றோம் மானம் காக்க உடை கொடுக்கும் நெசவாளர்களையும் நமக்காக உழைக்கும் தொழிலாளர்களையும்  விவசாயிகளையும் சட்டமும் நிர்வாகமும் ஏட்டளவில் மதித்தாலும்   இந்தியா விடுதலை பெற்று 73 ஆண்டுகள் ஆகியும் உண்மையில் இவர்களுக்கு சுதந்திரத்தின் லாபமோ விடுதலையின் பயனோ சென்றடையாமல் இருப்பதால் கடைகோடி தொழிலாளர்களுக்கும் சம நீதி எளிமைமையாக கிடைக்க வேண்டும் என்ற கொள்கையுடைய பத்து ரூபாய் இயக்கம்

"சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை"

என்ற வள்ளுவன் வாக்கிற்கு இணங்க  ஒட்டு மொத்த தொழிலாளர்களின் முதல்வனான  உழவர் பெருமக்களை பத்து ரூபாய் இயக்கம் தன்னுடைய தலைவனாக ஏற்றுக் கொன்டுள்ளது.  

ஆகவே பத்து ரூபாய் இயக்கத்தின் ஊராட்சி அளவிலான கிளை அமைப்பு, ஊராட்சி ஒன்றிய, மாவட்ட,  மாநில அளவில் தலைவர் என்று ஒரு  பதவி கிடையாது.  
ஒட்டு மொத்த உழவர் பெருமக்களை பத்து ரூபாய் இயக்கம் தன்னுடைய தலைவனாக ஏற்றுக் கொன்டுள்ளது.
  
Dr. நல்வினை விஸ்வராஜு M.A.,B.L.,
வழக்கறிஞர்